Saturday, April 5, 2025

நகை வாங்க போறீங்களா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க..!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.8,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.4 குறைந்து ரூ.108-க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest news