கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ. 8,010 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் ரூ. 104.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,900-க்கும் விற்பனையாகிறது.