TODAY GOLD RATE : இன்றைய தங்கம் விலை நிலவரம் (02-10-2025)..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான நேற்று காலை, மாலை என இரு முறை தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்றபனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி, இன்று விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2,000 உயர்ந்து பார் வெள்ளி பார் வெள்ளி 1,63,000 ரூபாய்க்கும் விற்றபனை செய்யப்படுகிறது.

Related News

Latest News