Monday, December 1, 2025

TODAY GOLD RATE : (01-12-2025) மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்,வெள்ளி விலை!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது.

கடந்த வாரம் வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் மீண்டும் உச்சத்திற்கு சென்றது. இந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன் படி, கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1.96.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News