ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த 17-ந் தேதி விலை உச்சத்தை தொட்டது. அதாவது, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97.600-க்கும் விற்பனையாகி பெரும் அதிர்ச்சியை தந்தது.
இந்த நிலையில், நேற்று தங்கம் விலையானது மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளின் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90.480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
