தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,160 க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,895-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.