சற்று குறைந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,270-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News