சற்று குறைந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News