தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை, அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News