Friday, May 30, 2025

தங்கம் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news