இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8,915 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,020 க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News