தங்கம் விலை நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,020-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,160 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
