நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்., மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை

இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு ரூ.2400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540 க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலையில் ரூ.2,400 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,280 சரிந்துள்ளதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News