தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சத்தை எட்டியது. தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.8,000 அதிகரித்து ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 12,000 அதிகரித்து, ரூ.3,30,000-க்கும், கிராமுக்கு ரூ.12அதிகரித்து. ஒரு கிராம் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
