அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை., ஆறுதல் தந்த வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகிறது.

இரண்டாவது நாளாக வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3 குறைந்து ரூ.203 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.3,000 குறைந்து ரூ.2,03,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News