கேரளாவைச் சேர்ந்த ஒரு தொகுப்பாளினி, ஓணத்திற்காக கேரள பாரம்பரிய சேலையை அணிந்து நிகழ்ச்சி ஒன்றை முடித்து விட்டு, நெரிசலான பேருந்து பயணத்தின் போது ஒரு ஆண் அந்த பெண்ணை தகாத முறையில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுப்பாளினி அந்த நபர் பார்ப்பதை தொலைபேசியில் வீடியோ எடுத்து தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டார், அந்த வீடியோவில் “உடை ஒருபோதும் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை” என்று வலியுறுத்தும் ஒரு தலைப்போடு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். பின்னர் சமூக ஊடகங்களில் காட்டுத்தீபோல் பரவியதால், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த வீடியோ குறித்து பேசிய அந்த பெண்,80% பேர் ஆதரவாக பேசினார், ஆனால் 20 % பேர் கூறியது நீ அணிந்தருந்த ஆடை தவறானது இது குறித்து காவல் நிலையத்தை புகார் கொடுத்திருக்கலாமே என்று கமெண்ட் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தை புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் அந்த பாதிக்கப்பட்ட பெண். மேலும் 80% பேர் எனக்கு ஆதரவாக பேசியதற்கு நன்றி, ஆனால் மீதமுள்ள 20% நபர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இந்த கேவலமான செயலில் ஈடுபட்ட நபரை இந்த நாடே பார்க்கவேண்டும் என்று தான் பதிவு செய்தென், மேலும்,அந்த நபர் அப்பா வயது உடையவர் என்றும் குறிப்பிட்டார், தொடர்ந்து பேசிய பாதிக்கப்பட்ட பெண் நான் சேலைதான் அணிந்திருந்தேன், என்றும் தெரிவித்தார்.பெண்கள் அணியும் ஆடைகளை குறை சொல்லவதை நிறுத்தி விட்டு, எண்ணங்களை சரி செய்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட பெண் , மேலும் இன்று எனக்கு நடந்த இந்த சம்பவம் நாளைக்கு உங்க வீட்டு பெண்ணுக்கு நடக்காத? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.