‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. இவருடைய வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்நிலையில் வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.