தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, “ஹாப்பி ராஜ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.
