திருப்பூா்: மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்டரில் பலியானார்.
இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். மது அருந்திய பின், தந்தை, மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மூவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தடுக்க வந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலை மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சண்முகவேல் இறந்தார்.இதையடுத்து மூர்த்தி, தங்கபாண்டியன் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் இன்று காலை சிக்கனுாத்து கிராமத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். பின்னர் மணிகண்டன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.