மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் ஃலைப். இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா. அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் வசூலில் தோல்வியை தழுவியது. தியேட்டரில் மொரட்டு அடி வாங்கிய இப்படம் ஓடிடியிலாவது கவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சில நாட்களுக்கு முன்புதான் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ‘தக் லைஃப்’ படம் ஓடிடியில் வெளியான முதல் வாரத்தில் 24 லட்சம் பார்வைகளை பெற்றது. தற்போது இரண்டாவது வாரத்தில் 33 லட்சம் பார்வைகளை பெற்று இந்திய அளவில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற படம் என்ற பெயரை வாங்கியிருக்கிறது.
தியேட்டரில் அடி வாங்கிய தக் லைஃப் ஓடிடியிலாவது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பது படக்குழுவுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்திருக்கும்.