தஞ்சை அருகே பா.ஜ.க பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் சரண் அடைந்துள்ளனர்.
மதுரை மத்திய தொகுதி பா.ஜ.க மாநகரத் தலைவராக செயல்பட்டு வந்த சரண்யாவை அடையாளம் தெரியாத சிலர் அவரை படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.