Friday, February 21, 2025

இந்தியாவில் அதிகமாக பேசப்படுகின்ற இந்தியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு?

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது : மும்மொழி திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என குறிப்பிட்டு திணிக்கவில்லை. வேறு எந்தவொரு மாநிலத்தின் பிரதான மொழியையும் விருப்பத்தேர்வாக தமிழ் மாணவர்கள் கற்கலாம் என்கிறது. பிற மாநிலங்களில் மூன்றாவது விருப்ப மொழியாக மாணவர்கள் தமிழை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்குகிறது.

சர்வதேச அளவில் மக்கள் தங்களது நாட்டிற்கேற்ற மொழியை பேசும்போது, இந்தியாவில் அதிகமாக பேசப்படுகின்ற இந்தியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல்கட்சி தலைவர்கள் நடத்தும் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக உள்ளது. தங்களது அரசியல் நோக்கத்திற்காக இளைய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி உரிமையையும், வாய்ப்பையும் தவிர்க்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

Latest news