Monday, December 29, 2025

டேட்டா காலி ஆயிடுச்சா.., வெறும் ரூ,50க்குள் Jio வின் மூன்று திட்டம்

Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்காக மிகவும் குறைந்த விலையில் 4G டேட்டா வவுச்சர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.100-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மூன்று டேட்டா பேக் திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் 4G டேட்டா வவுச்சர் திட்டங்களாகும்.

Jio ரூ.11 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.11 திட்டம் 1 மணி நேர வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், உண்மையில் அதிகபட்சமாக 10GB டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

Jio ரூ.19 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.19 திட்டம் 1GB டேட்டாவுடன் 1 நாள் வேலிடிட்டி வழங்குகிறது. இது உங்கள் தினசரி டேட்டா முடிந்த பிறகு, மீண்டும் டேட்டா ரீஸ்டோர் ஆகும் வரை தற்காலிகமாக பயன்படுத்த உதவும்.

Jio ரூ.29 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.29 திட்டம் 2 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் 2GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. டேட்டா அளவு அதிகமாக இல்லாவிட்டாலும், அவசர காலங்களில் பேக்கப் டேட்டா திட்டமாக பயன்படுத்த ஏற்றதாக உள்ளது.

Related News

Latest News