வாட்ஸ்அப்பில் வரும் புகைப் படங்களை திறக்கும் போது உஷாராக இருங்கள் !
குறிப்பாக தெரியாத நபர்களிடம் இருந்து வரும் புகைப்படங்களை தவிர்த்து விடுங்கள் …
அதை நீங்கள் திறக்கிறீர்கள் என்றால்… சில நிமிடங்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் பறி போகி விடும்!
இது வதந்தி அல்ல.. . மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடந்த உண்மை சம்பவம்!
வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்களும் இப்போது அபாயமாகி விட்டது.
ஸ்டெகானோகிராபி என்ற ஒரு கெட்ட நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்தறாங்க.
அது என்ன தெரியுமா?
படக்கோப்புக்குள்ளே ஹேக்கர்கள் ஒரு தீங்கிழைக்கும் வைரஸை (மால்வேர்) மறைத்து வைக்கிறாங்க.
படத்தை நீங்கள் திறந்த உடனே, அந்த வைரஸ் உங்க மொபைல்ல வேலை செய்ய ஆரம்பிச்சிடும்!
அது என்ன செய்யும் தெரியுமா?
உங்கள் வங்கி விவரங்கள்,OTP-கள்,கடவுச்சொற்கள்…
இவையெல்லாம் உங்களுக்கே தெரியாமல் திருடி, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை வெளியில் எடுக்க முடியும்.
சில சமயங்களில், உங்கள் மொபைலை அவர்கள் ரிமோட்டாகக் கூட கட்டுப்படுத்த கூட முடியும்!
இதிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
வாட்ஸ்அப்பை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளுங்க.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் படம்/லிங்க் என்றாலே, திறக்காமல் தவிர்க்கணும்.
டெஸ்க்டாப்புல வாட்ஸ்அப் பயன்படுத்துறவங்க, அடிக்கடி படம் அனுப்பும் எண்ணை சந்தேகிக்கணும்.
ப்ளே ஸ்டோர், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் மாதிரி நம்பகமான இடங்களிலிருந்து மட்டும்தான் செயலிகளை டவுன்லோட் செய்யணும்.
ஒரு சிறிய புகைப்படம் போலத் தோன்றும் ஒரு கோப்பே, உங்கள் சீரிய வாழ்க்கையையே பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தாக இருக்கக் கூடும். எனவே உஷாராக இருங்கள்!