Thursday, December 18, 2025

பொங்கல் வேட்டி, சேலை வாங்காதவர்கள் இந்த தேதிக்குள் வாங்கிக்கொள்ளலாம்

பொங்கலை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 224 நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் நியாயவிலை கடைகளில் மார்ச் 31ம் தேதிக்குள் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News