Tuesday, May 13, 2025

‘காசுக்காக வாக்களிப்பவர்கள் மறுபிறவியில்’….. பாஜக எம்.எல்.ஏ பேச்சு

மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏ-வுமான உஷா தாகுர் புதன்கிழமை நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது : வாக்களிக்கும் போது ஒருபோதும் நேர்மையை இழக்காதீர்கள். கடவுள் மேலே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம், சேலை, கண்ணாடி மற்றும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் அடுத்த பிறவியில் ஒட்டகம், ஆடு, செம்மறியாடு, நாய் மற்றும் பூனையாக பிறப்பீர்கள் என்று பேசியுள்ளார்.

Latest news