ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த வீட்டின் முகவரி யாருக்குமே தெரியாது. மதுரவாயிலில் உள்ள எனது சொந்த வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை காவல்துறை உள்ளிட்ட யாருக்கும் கொடுத்ததே கிடையாது. காவல்துறை என் வீட்டின் முகவரியை அளித்து தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.