Tuesday, April 22, 2025

job’ தேடுறவங்க நோட் பண்ணிக்கோங்க! மாதந்தோறும் தமிழக அரசின் உதவித்தொகை! யார் யார் எப்படி விண்ணப்பிக்கலாம் ?

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மாத உதவித்தொகை – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? முழுமையான தகவல் இங்கே!

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக தமிழக அரசு முக்கியமான ஒரு சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தகுதியான இளைஞர்களிடமிருந்து மாத உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இளைஞர்களுக்கு அரசாங்கம் மாதம் மாதம் நிதியுதவி வழங்க உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, சில முக்கியமான தகுதிகள் உள்ளன. அவை வருமாறு:

1. விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்து, அதை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். 

2. கல்வித் தகுதியாக, எஸ்.எஸ்.எல்.சி தோல்வி முதல், பட்டப்படிப்பு வரை ஏதேனும் ஒரு தகுதி பெற்றிருக்க வேண்டும். 

3. விண்ணப்பதாரரின் வயது 40-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

4. விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடாது. 

5. தனியார் தொழில் நடத்தாதவராகவும், முழுமையாக வேலைவாய்ப்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

6. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து தகுதிகளும் உள்ளவர்கள், சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று, விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதனை நிரப்பி சமர்ப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் இதற்கான விண்ணப்பத்தை, கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறலாம்.

இதேசமயம், ஏற்கனவே இந்த உதவித் தொகையை பெறும் நபர்கள், ஓராண்டு நிறைவடைந்ததும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்:

– வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், 

– உதவித்தொகை எண், 

– வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், 

– ஆதார் எண் மற்றும் 

– சுய உறுதிமொழி ஆவணம். 

இந்தத் திட்டம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக தமிழக அரசு எடுத்துள்ள ஒரு முக்கியமான சமூக நல முயற்சியாகும். இதை பயன்படுத்திக்கொண்டு, தகுதியுள்ள இளைஞர்கள் நலமுடன் தங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்.

Latest news