Friday, March 28, 2025

இந்த வாரம்தான் ரொம்ப முக்கியம்! தங்கம் விலையில் நடக்க போகும் அதிரடி மாற்றம்! அலர்ட் மக்களே!

தங்கம் விலையில் இந்த ஒரு வாரத்திற்கு அதிரடியான மாற்றங்கள் இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. நிதி ஆண்டு முடியவிருக்கிறது என்பதால் தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கலாம்.

ஏப்ரல் 2ம் தேதி வர்த்தக போர் உச்சம் அடைய இருப்பதால் இந்தியா வரியை குறைக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் அப்படியே இந்தியா வரியை குறைத்தாலும் தாங்கள் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாப்பிடியாக இருக்கிறார்.

“அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப் போகிறார்கள் என்றாலும் ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர்கள் எங்களிடம் இப்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம். அவர்கள் குறைத்தாலும் குறைக்கவிட்டாலும் நாங்கள் இந்தியாவை விட மாட்டோம். அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அளவிற்கு உயர்த்துவோம்” என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘இதனால் அதற்கு பின் தங்கம்தான் ஒரே பாதுகாப்பு என்பதால் பலரும் தங்கத்தை நோக்கி படையெடுப்பார்கள் என்பதால் தங்கம் விலை ஏப்ரலில் இருந்து கடுமையாக உயர்ந்தாலும் அதற்கு முன் தற்போதே தங்கம் விலையில் மாற்றம் செய்யப்படும். அதாவது விலை சில சமயங்களில் மிக அதிகமாக உயர்ந்துவிட்டால் சற்றே விலை குறைந்து சமநிலையை அடையும். அந்த வகையில் இந்த வாரம் சிறிய கரெக்சனை எதிர்பார்க்கலாம்’ என்று உலக பொருளாதார வல்லுநர்களால் கூறப்படுகிறது.

இதன் அர்த்தம் என்னவென்றால் தங்கத்தின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்து அதல பாதாளத்துக்கு சென்றுவிடாது. மாறாக லேசாக குறையும். ஆனால் மீண்டும் உயரக் கூடும். கடந்த வாரம் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 005.09 டாலர் என்ற அதிரடி சாதனையை செய்தது. அமெரிக்காவில் தங்கம், இந்த ஆண்டு இதுவரை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. டிரம்ப் ஜனவரியில் பதவி ஏற்றது முதல் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது இந்த வாரமும் அப்படியே இருக்கும். அதாவது 3 ஆயிரம் டாலருக்கு கீழே போனாலும் மீண்டும் 3 ஆயிரம் டாலரை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.

Latest news