உணவின் சுவையை உணர்த்தும் அசத்தலான புதிய வகை தொலைக்காட்சியை ஜப்பானியப் பேராசிரியை உருவாக்கியுள்ளார்.
டேஸ்ட் தி டிவி என்று அழைக்கப்படும் இந்த சாதனம்மூலம் 10 வகையான உணவின் சுவையை அறியலாம் என்று அதனை உருவாக்கியுள்ள ஹோமி மியாஷிதா தெரிவித்துள்ளார்.
இவர் ஜப்பானிலுள்ள மெய்ஜி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்தத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் உணவை நாவால் தடவினால், அந்த உணவின் சுவையை உணரமுடியுமாம்.
உலகின் மறுபக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தை மக்கள் வீட்டிலிருந்தபடியே பெறுவதை சாத்தியமாக்குவதே குறிக்கோள் என்கிறார் இந்தப் புதுமையான டிவியைக் கண்டுபிடித்துள்ள ஹோமி மியாஷிதா.
ஒரு டேஸ்ட் தி டிவியைத் தயாரிக்க ஒரு லட்சம் ஜப்பான் யென் செலவாகும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.