தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில காலத்தில் நடைபெறவுள்ளதால் அரசியல் சூழல் தற்போது பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், கொடைக்கானலின் முக்கிய பகுதிகளில், NDA கூட்டணியை விமர்சிக்கும் வகையில் சுவர் பொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “டபுள் இன்ஜின் டப்பா இன்ஜின், தமிழ்நாட்டில் ஓடாது” என்ற வாசகத்துடன் NDA கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
