திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க வில் இணைந்தார். மதிமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் த.வெ.க வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், த.வெ.க வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது :
விஜய்யை சந்தித்து த.வெ.க வில் இணைந்த நாளான இன்று புதிதாய் பிறந்ததாக உணர்கிறேன். விஜய் என்னை கண்டதும் நான் உங்கள் ரசிகன் என கூறினார்.
விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என்று சொன்ன பிறகு என்னை அதிகளவில் வசை பாடினார்கள்.
திராவிட இயக்கத்தலைவர் சுப.வீரபாண்டியன் திமுக மேடையில் என்னை அவமதித்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவு திருவிழாவில் திமுக என்னை திட்டமிட்டு புறக்கணித்தது.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்.
திமுகவில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
