Saturday, April 12, 2025

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை இப்படித்தான் இருக்கும்! ஆனந்த் சீனிவாசன் என்ன இப்படி சொல்லி இருக்கிறார்?

யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இமாலய உச்சத்தை எட்டிப்பிடித்து “இதுக்கு ஒரு End Card-ஏ இல்லையா” என கேட்க வைத்துவிட்டது இந்த தங்கம் விலை.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து Top Gear போட்டு உயர்ந்து வருகிறது. விலை உயரும் என்று கணிக்கப்பட்டிருந்த போதிலும் இந்தளவுக்கு உயரும் என்பதை யாருமே கற்பனை கூட செய்யவில்லை. இதற்கிடையே தங்கம் விலையில் ஏற்படும் சராசர ஏற்றங்களையும் சின்ன சின்ன சறுக்கல்களையும் குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதைப்பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில், “தங்கம் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டது. இடையில் சில நாட்களாக குறைந்த தங்கம் விலை, மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இப்போது ரூ.8 ஆயிரத்து 500-ஐ தாண்டிவிட்டது. நான்கு நாட்கள் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் தங்கத்தை வாங்காமல் 38% குறையும் 36% குறையும் என காத்திருக்கிறீர்கள்.

தங்கம் விலை ஒரு தடவை 1800 டாலரில் இருந்து 1100 டாலருக்கு குறைந்துள்ளது. அதாவது 700 டாலர் ஒரே நேரத்தில் குறைந்தது. ஆனால், அந்த சமயத்தில் நமது ரூபாய் மதிப்பும் சரிந்ததால் இந்தியாவில் தங்கம் விலை பெரிளவில் சரிந்தது போல நமக்கு தெரியவில்லை. இந்த தடவையும் ரூபாய் விலை சரிந்ததும் தங்கம் விலை உயர ஒரு காரணமாக இருக்கிறது.

மேலும் அமெரிக்க பங்குச்சந்தை டவ் ஜோன்ஸ் 1928 முதல் 1954 வரை 800ஐ தாண்டவில்லை. 1928ல் விழுந்த மார்க்கெட் 25 ஆண்டுகளுக்கு பின்னரே உயர்ந்தது. ஜப்பானிலும் கூட அதுபோல நடந்தது. ஓவராக அதிகரித்துவிட்டால் அதுபோல மீண்டும் சரிவில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகும்” என்றார்.

அது மட்டுமில்லாமல் அவர் தனது மற்றொரு வீடியோவில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும் என கூறியிருப்பதோடு இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை குறைக்க வாய்ப்பிருக்கும் நிலையில், அப்போது தங்கம் விலை புதிய உச்சத்தை தொடவிருப்பதாக சொல்லியிருப்பது இதயங்களை படபடக்கவே செய்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news