Sunday, August 31, 2025
HTML tutorial

இனி பள்ளி வகுப்பறைகள் இப்படித்தான் இருக்கும் : பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி

தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை ‘ப’ வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News