Wednesday, July 30, 2025

அமெரிக்க தாக்குதலில் ‘இது தான்’ நடந்தது! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஈரான்! சேத விவரம் என்ன?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட காரணத்தினாலேயே அந்நாட்டின் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக்கொண்டன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்க தாக்குதலும் நடந்தது.

கடந்த 22ம் தேதி ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா தனது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஃபோர்டோ அணு உலை மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அணு உலைகள் முற்றிலும் சேதமடைந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது வரை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால், இந்த தாக்குதலில் பெரும் சேதம் இல்லை என்று ஈரானும் திரும்ப திரும்ப மறுத்து வந்தது. அது மட்டுமல்லாமல் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் ஈரான் அறிவித்திருந்தது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஈரானும் தங்களது அணு உலைகள் சேதமடைந்ததை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. இதைப்பற்றி பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் சேதமடைந்தது உண்மை தான் என தெரிவித்துள்ளார். இருப்பினும் சேதம் குறித்த முழுமையான விவரங்களை பகிர மறுத்துவிட்டார்..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News