தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ”முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அவர் உயிராக மதித்த சகோதரர் முத்து மரணம். ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தார். சாப்பிடாமல் இருந்தார். மறுநாள் நடைப்பயிற்சி செய்ததால் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.