முதல் மனைவிக்குப் பிறந்த மகனா இவர்! பிரபு தேவாவை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்த அவரது மகன்…

86
Advertisement

நடன இயக்குநராக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த பிரபு தேவா, அதன் பின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறி இந்திய சினிமாவில் வெற்றிகரமான நபராக வலம் வந்தார்.


இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் பிறந்தனர், ஆனால் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தப் பின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவைக் காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால் முதல் மனைவி பிரச்சனை செய்ததால் நயன்தாரா இவரை விட்டு பிரிந்தார்.


ஆனால் நயன்தாராவிற்குப் பிறகு வேறொரு பெண்ணை பிரபு தேவா இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார், ஆனால் அவரது இரண்டாவது மனைவியை அவர் வெளியுலகத்திற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியதே இல்லை,


என்னதான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாலும், தனது மகன்களை நன்றாகவே கவனித்து வருகின்றார் பிரபுதேவா. இந்நிலையில் தனது இரண்டாவது மகனுடன் கோடை விடுமுறையைக் கொண்டாடி வருகின்றார்.
தனது மகனுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட நிலையில். அதில் பிரபு தேவாவை விட அவரின் மகன் பெரிதாக வளர்ந்துள்ளதால், உங்களின் மகன் மிக வேகமாக வளர்ந்து விட்டாரே என்று ரசிகர்கள் கமெண்டு செய்து வருகிறார்கள்.