Thursday, July 31, 2025

பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை காரணம் இதுதான்!

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.


இந்தப் படத்துக்கு ஆதரவு குறைவாகவும் எதிர்ப்புகள் அதிகமாகவும் பல கருந்துகள் உண்டாகி வருகின்றன, மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 5 மொழிகளில் வெளியானது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர், மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.
இருப்பினும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது, 30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இதுவரை ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில நடித்துள்ள அதா சர்மா, திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை முன்பே மாற்றிக்கொண்டதாக ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் என்றும் , அதனை சொல்வதற்கு சிரமமாக இருப்பதால் தனது பெயரை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பா தமிழ், அம்மா மலையாளி என்றும் பகிர்ந்துகொண்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News