Thursday, October 2, 2025

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் : சோயப் அக்தர் கடும் விமர்சனம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் நடைபெற்ற 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தியாவுடன் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “என்னை பொறுத்த அளவில் அணி தேர்வு முறையே தவறாக உள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை எடுத்திருக்க வேண்டும். முதல் பத்து ஓவர்களிலேயே 91 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் தான் மிகவும் பலவீனமாக இருக்கிறார். இந்த தோல்விக்கு கேப்டன் பயிற்சியாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சல்மான் அகா எதற்காக கேப்டனாக இருக்கிறார்? அவர் பாகிஸ்தான் அணிக்கு பலவீனத்தையே ஏற்படுத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News