2026-ல் ஒரு கிராம் தங்கம் விலை இதுதான்? நிபுணர்கள் கணிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி மேலும் அதிர்ச்சி அளித்து வருகிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனத்தை வெள்ளி மீதும் திருப்பியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையிலான வர்த்தக பதட்டங்கள் அதிகரிப்பதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமான தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்துக்கு உயர்ந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் வர்த்தக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் தங்க விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணிகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல், அமெரிக்க அரசு கட்டண அறிவிப்புகள் பங்குச் சந்தையில் நிதி சீரற்ற தன்மையை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களை பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டுகிறது.

நிபுணர்களின் மதிப்பீட்டின் படி, 2026ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் சுமார் ரூ.15,000 அளவில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்றும், எதிர்காலத்தில் இதன் விலை உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தங்கம் தற்போது பாதுகாப்பான மற்றும் வருமான உறுதி வாய்ந்த முதலீட்டு கருவியாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்து, தங்கத்தில் பணத்தை கொட்டி வருகிறார்கள்.

வெள்ளியும் இதேபோல் தொடர்ந்து விலை உயரும் என்ற நிபுணர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதனால் தங்க-வெள்ளி சந்தை மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும் நிலை உருவாகியுள்ளது.

Related News

Latest News