தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இதையடுத்து 2 வது மாநாடு மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வரும் 13ம் தேதியில் இருந்து திருச்சியில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு ‘மக்களுடன் சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்சை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளனர். தவெக தலைவர் விஜய் ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.