Monday, April 28, 2025

அடுத்த தங்கம் இது தான்! அமெரிக்கா இதை வாங்கி குவிக்க தொடங்கிடுச்சு! பறந்தது டிரம்பின் உத்தரவு!

டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான போதே / தான் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார். அதனால் அப்போதே பிட்காயின் மதிப்பு சரசரவென புதிய உச்சத்தை எட்டியது. தற்போது ஒரு படி முன்னேறி பிட்காயினை இருப்பு வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

பொதுவாக அனைத்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும். ஏனெனில் பொருளாதார சிக்கல் ஏற்படும் போது தங்கம் தான் கைகொடுக்கும் என்பதால் உலக நாடுகள் இதனை செய்கின்றன. அந்த அடிப்படியில் உலகின் பெருவாரியான தங்கம் இதுபோல உலக நாடுகளின் மத்திய வங்கிகளிடமே கொட்டிக்கிடக்கிறது. சமீப நாட்களாக தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதை பார்க்கிறோம்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த அனல் பறக்கும் கொள்கை முடிவுகளை தொடர்ந்து தங்கத்தைப் போலவே பிட்காயினையும் கையிருப்பாக வாங்கி வைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் Federal வங்கி தொடங்கியுள்ளது. இதனால் பிட்காயின் / அடுத்த தங்கமாக உருவெடுக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? இதன் பின்னணி என்ன?

தற்போது டிரம்ப் பிட்காயினை கையிருப்பில் வைக்க உத்தரவிட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சியின் தலைநகராக அமெரிக்காவை மாற்றப் போவதாக அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதை தொடர்ந்து தங்கத்தைப் போலவே பிட்காயினும் பொருளாதார பாதிப்பு ஏற்படும்போது காப்பாற்றும் என்கிறார்கள் டிரம்பை ஆதரிப்பவர்கள்.

மேலும் பிட்காயினை நீண்ட காலத்திற்கு கையிருப்பில் வைத்திருந்தால் சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து தப்பிக்க முடியும் என ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது. பிட்காயின் மொத்தமே 21 மில்லின் காயின்கள் மட்டுமே புழக்கத்துக்கு வரும் என்பதால் இது தங்கத்திற்கு இணையான மதிப்பை பிட்காயினுக்கு  கொடுக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Latest news