அதிமுக அழிவின் விளிம்பில் இருக்கிறது, எடப்பாடி பழனிசாமிக்கு இதுவே கடைசி தேர்தல் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வளர்த்த அதிமுக, நமது கண் முன்னே அழிந்து வருகிறது என்று தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலே எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் கூறினார்.