EPFO இந்திய தொழிலாளர்களின் வருங்கால நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட மிக முக்கியமான திட்டம். மாதம்தோறும் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி Provident Fund-க்காக செலுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆண்டு தோறும் அரசு ஒரு வட்டி வழங்குகிறது.
இப்போது, 2024–25ஆம் நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் முந்தைய ஆண்டைப் போலவே, 8.25% வட்டி விகிதமே தொடரப்படுகிறது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த விகிதம் முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த பரிந்துரை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது, மேலும் அங்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 8.25% வட்டி விகிதம் கடந்த 2023-24 ஆம் ஆண்டிலும் இருந்தது. அதற்கு முந்தைய 2022-23-ல் இது 8.15% ஆக இருந்தது , 2021-22ல் 8.10% ஆகியவையாக இருந்தன. இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உயர்வுடன் நிலைத்திருக்கும் விகிதமாகும்.
இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்டகால சேமிப்புகளுக்கு இது ஒரு உற்சாகமான செய்தி.
EPF வட்டியில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கே பெரிய தாக்கங்கள் இருக்கின்றன. ஏனெனில், இந்த தொகைகள் நீண்டகால சேமிப்பாக செயல்படுவதால், வட்டி விகித உயர்ந்தால் உங்களது வருங்கால வைப்புகள் மிகப் பெரிய அளவில் வளரும். அதனால், உங்கள் PF கணக்கில் சேரும் தொகையை தொடர்ந்து கவனித்துக்கொண்டு, ஓய்வு காலத்திற்கான திட்டங்களை திட்டமிடத் தொடங்குங்கள்.