Monday, March 31, 2025

தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய சுங்கச்சாவடி இதுதான்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சுங்கச்சாவடி வசூல் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, இந்த காலகட்டத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த சுங்கச்சாவடிகள், சில மிகுந்த வருவாய் ஈட்டுவதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளன. உயர்ந்த போக்குவரத்து மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருப்பது இவைகளின் வருவாய் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கியமான சுங்கச்சாவடிகள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.14,000 கோடிக்கு வருவாய் ஈட்டியுள்ளன. இந்த பட்டியலில் முதலிடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள Bharthana சுங்கச்சாவடி ரூ.2,043.81 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் Shahjahan Pur சுங்கச்சாவடியில் ரூ.1,884.46 கோடி வசூல் செய்துள்ளது. மேற்குவங்க மாநிலம் Jaladhulagori சுங்கச்சாவடி ரூ.1,538.91 கோடியுடன் 3வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய சுங்கச்சாவடி பட்டியலில் கிருஷ்ணகிரி தொப்பூர் சுங்கச்சாவடி இடம்பெற்றுள்ளது. இந்த டோல்கேட் மூலம் ரூ1,124.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Latest news