தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
