ஒரு கைப்பிடி நட்ஸ் தினமும் மட்டுமே போதுமானது. சரியான நேரத்தில் சாப்பிட்டால், நட்ஸ்களில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலுக்கு சிறப்பாக செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பாதாம்
காலை எழுந்தவுடன் 2-4 பாதாம் சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் வைட்டமின் E மற்றும் மக்னீசியம் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மூளைச் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் பாதாம் சாப்பிடுவது உடலுக்கு தினசரி சக்தி அளிக்கும்.
வால்நட்ஸ்
மாலை அல்லது இரவு உணவுக்குப்பின்னர் 2 வால்நட் சாப்பிடுங்கள். இதில் உள்ள ஓமேகா-3 மற்றும் மெலட்டோனின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உறக்கத்துக்கு உதவும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிடலாம்.
முந்திரி
மதிய உணவோடும் சேர்த்து முந்திரி சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள சிங்க் மற்றும் இரும்பு உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பிஸ்தா
மதிய உணவுக்குப்பின்னர் 4-5 பிஸ்தா சாப்பிடலாம். இதில் புரதமும் நார்ச்சத்தும் சேர்ந்து, பிற்பகல் பசி மற்றும் சோர்வை குறைக்கும்.
வேர்க்கடலை
வேர்க்கடலை எப்போதும் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இது மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். விலை குறைவாக இருப்பதால் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும்.
தினமும் ஒரு கைப்பிடி கலந்த நட்ஸ் சாப்பிடுவது எடை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் நல்ல தூக்கத்திற்கு உதவும்.