Tuesday, July 1, 2025

இதய நோய்க்கும் ,நீரிழிவு நோய்க்கும் இது தான் ‘Best’! நோட் பண்ணிக்கோங்க!

தினமும் நம்முடைய உணவில் சேர்க்கும் கொஞ்சம் மாற்றமே, நீண்ட நாள் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் சக்தியாக இருக்கலாம். ஹார்வர்ட் பொது சுகாதார பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், காய்கறிகள், பழங்கள், முழுமையான தானியங்கள் மற்றும் பசுமை எண்ணெய்களில் உள்ள “பைட்டோஸ்டெரால்கள்”(phytosterols) என்ற இயற்கை சேர்மங்கள், 2-வகை நீரிழிவு நோய்கள் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பைட்டோஸ்டெரால்கள் அதிகம் செரிமானமாகும் உணவுகளை உண்பவர்களுக்கு, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை 9% குறைவாகவும் மற்றும் நீரிழிவு ஏற்படும் வாய்ப்பை 8% குறைப்பதையும் காட்டுகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் தினமும் 4 முதல் 5 வகை காய்கறிகள், 2 முதல் 3 வகை பழங்கள், மற்றும் 2 முழுதானிய வகைகள் மற்றும் பாதி அளவு பருப்பு அல்லது நட்ஸ்கள் உண்டவர்கள்.

ப்ரோக்கோலி (Broccoli), சோயா எண்ணெய், அவகாடோ, ஆரஞ்சு போன்றவற்றில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டெரால் (β-sitosterol) என்ற பைட்டோஸ்டெரால், குடல் கிருமிகளை மாற்றி, நன்மை தரும் சுருக்கப்பட்ட கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது. இது நீரிழிவு அபாயத்தை குறைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. மேலும், இது TMAO என்ற ஒரு தீங்கு தரும் சேர்மத்தை குறைக்கும் திறன் கொண்டது — இது redmeet என்று அழைக்கப்படும் பீஃப்,ஆட்டிறைச்சி போன்ற உணவுகளின் செரிமானத்தின் போது உருவாகும் ஒன்று, இதய நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது.

முக்கியமாக இவை எல்லாம் உணவின் வாயிலாகவே கிடைக்க வேண்டும் என்பதே இதில் முக்கிய புள்ளி. சப்ளிமெண்ட் மாதிரிகள், ஆய்வுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், உணவின் மூலமாக கிடைக்கும் பைட்டோஸ்டெரால்கள் கூட நன்மை தரும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. இது உணவில் வழக்கமாக 600 மி.கி.க்குக் கீழ் தான் கிடைக்கிறது. ஆனால், அது போதும் என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அதாவது, நம்முடைய அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நல்ல எண்ணெய்கள் — குறிப்பாக மத்தியதரைக் கடல் உணவுப் பழக்கங்களான மீன், பால் பொருட்கள் போன்றவற்றை — அடிக்கடி சேர்த்தால், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு இயற்கையாகவே ஏற்படும்.

இது எந்த ஒரு அதிசய மருந்தும் இல்லாமல், உணவின் வழியாகவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அறிவியல் ஆதாரத்துடன் கூடிய இயற்கை வழியாகவே பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news