உலகளாவிய தங்க வர்த்தகத்தில் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதும் என பொறிகலங்க வைத்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை சரிந்து வந்திருந்தாலும் வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க மார்க்கெட்டில் தங்கம் விலை அதிரடி விலையேற்றத்தை கண்டுள்ளது.
இந்நிலையில் எல்லாரும் விழுந்தடித்து வாங்கும் தங்கம் கூட பாதுகாப்பு இல்லை என்றும் பிட்காயின் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும் என்று பிரபல ஜே பி மோர்கன் நிறுவனம் கூறி இருப்பதால் தங்கம் விலை சரியும் என்று பலரும் கணிக்கின்றனர். ஆனால் தங்கத்தின் விலை குறையாது என்றும் கட்டாயமாக உயரும் என்றும் Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்திருப்பதோடு விலை 10 மடங்கு உயரப்போவதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
மேலும் சர்வதேச அளவிலான தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை உச்ச வரம்பை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,300 டாலரிலிருந்து 3,700 டாலராக உயர்த்தியிருக்கும் அதே சமயத்தில் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்றும் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் தங்கம் விலை பற்றிய கணிப்புகள் கணகச்சிதமாக இருக்கும் என்பதால் இவர்களே 3,700 டாலர் என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாயை அடையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க