ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது முதல் இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை பல விஷயங்களுக்கு ஆதார் கார்டு முக்கியமானதாக உள்ளது
இந்நிலையில் ஆதார் கார்டு வழங்கும் முறையில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, ஆதார் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இனி புதிய வடிவத்தில் ஆதார் கார்டுகள் வழங்கப்படும். இது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கிய மாற்றங்கள்
18 வயதுக்குக் கீழ் குழந்தைகளின் ஆதார் கார்டுகளில் தந்தையின் பெயர் இடம்பெறும். அவர்களின் பெயரில் மாற்றம் செய்ய முடியாது.
18 வயதுக்கு மேற்பட்டோரின் ஆதார் கார்டுகளில் தந்தை அல்லது கணவர் பெயர் இருக்காது. விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இருக்கும்.
பழைய கார்டுகளில் இருந்த பிறந்த தேதி, மாதம் நீக்கப்பட்டு, பிறந்த வருடம் மட்டுமே குறிப்பிடப்படும்.
இனி ஆன்லைனில் தந்தை, கணவர் பெயர் உள்ளிடும் வசதி 18 வயதுக்குக் கீழ் குழந்தைகளுக்கு மட்டுமே உள்ளது. பழைய தரவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்படும் என UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் சேவை மையங்களில் இந்த மாற்றங்கள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆதார் அத்தியாவசிய ஆவணமாக இருப்பதால், அனைவரும் தங்கள் கார்டுகளை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.
